Posts

Ramadan Wishes 2025: இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!!

Image
Happy Ramadan Wishes 2025 - இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் . ரமலான் மாதம் ஞாயிற்றுக்கிழமை,  மார்ச் 2ம் தேதி தொடங்கி  மார்ச் 31ம் தேதி திங்கட்கிழமை வரை உள்ளது. இந்தியாவில் ரம்ஜான் மார்ச் மாதம் 31 ம் தேதி , திங்கட்கிழமை கொண்டாடப்பட வே அதிக வாய்ப்புள்ளது .    

சிரிங்க சிரிங்க சந்தோஷமா இருங்க!!!

Image
தற்போது இணையத்தில் கலக்கி கொண்டு இருக்கும் முத்துராஜ் என்பவர் தனது யூடியூப் சேன லில் பழைய கிறிஞ்சு காமெடிகளை தனது பாணியில் பதிவேற்றம் செய்து வருகிறார். அதிலும் அவர் சிரிங்க சிரிங்க சந்தோஷமா இருங்க என்று சொல்வது மிக பிரபலமாகி விட்டது. இதனிடையே பிரபல பரிதாபங்கள் யூட்யூப் சேனல் கோபி, சுதாகர் கிண்டல் செய்த பிறகு அவர் இணையத்தில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

Muthalamaichar Kalaignar Kapitu Thittam: முதலமைச்சரின் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்!!!

Image
தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் பயன் என்ன? காப்பீட்டு அட்டை பெறும் வழிமுறைகள் என்ன?  இத்திட்டத்தின்படி ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சம் வரை உள்ள குடும்பத்தினர் ரூ. 5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறமுடியும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.20 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். சிகிச்சைகள் விவரங்கள் : பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சைகள், அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருக்கும் இதய, நரம்பு, சிறுநீரக நோய்கள், அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவற்றை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லா மருத்துவமாக இந்த காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை பெறலாம். ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான மதிப்புள்ள சிகிச்சைகள் பெறலாம். (சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் CMCHISTN வலைத்தளத்தில் விவரமாக உள்ளது) சிகிச்சை பெற தகுதி: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும...

தை பொங்கல் வைக்க நல்ல நேரம் 2025 - Pongal Time!!

Image
இ ந்த வருடம் 2025 தை 1 பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் எது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் . தமிழர்களின் பாரம்பரிய திருநாள் தைப்பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், தை மாதம் 1 நாள் நாம் புதுநெல்லில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு நன்றி சொல்லி வழிபடுவோம். அப்படி இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட உகந்த நேரத்தை குறித்து வைத்துக்கொள்வோம். குரோதி வருடம் தை மாதம் 1 ம் தேதி (14-1-2025) செவ்வாய்க்கிழமை . தை 1 பொங்கல் வைக்க நல்ல நேரம் நல்ல நேரம் - காலை (7:30 லிருந்து 8:30 வரை) (அல்லது) நல்ல நேரம் - காலை (10:30 லிருந்து 11:30 வரை) இந்த பொங்கலை நம் வீடுகளில் ஆனந்தமாய் அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம்!

Image
திருக்கார்த்திகை தீபம் தேதி 2024: Karthigai Deepam Date & Time தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபம் வரும் கார்த்திகை மாதம் 28ம் தேதி, டிசம்பர் 13ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக, அன்றைய தினம் பரணி நட்சத்திரம் காலை 6:50 முதல் மறுநாள் டிசம்பர் 14 அதிகாலை 4:56 வரை உள்ளது. எனவே டிசம்பர் 13ம் தேதி மாலை 6:35க்கு மேல் 7:30குள் கார்த்திகை தீபத்தை உங்கள் வீடுகளில் எற்ற நல்ல நேரம் ஆகும். திருவண்ணாமலை பரணி தீபம்: கார்த்திகை தீப திருநாளன்று மிகவும் புகழ் பெற்ற திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்படுகின்றது. அன்று காலை மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் தோன்றும் சிவபெருமான் காட்சியளித்ததை நினைவு கூறும் வகையில் திருவண்ணாமலை மலை உச்சியின் மேல் அன்றைய தினம் மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபம் வருவதற்கு முன்னதாகவே 2668 அடி உயரம் கொண்ட மலை மீது கொப்பரை தீபம் வைக்கப்படும்.

Karthigai 1 2024 Tamil Calendar: கார்த்திகை மாதம் 1ம் தேதி நல்ல நேரம்!!

Image
கார்த்திகை மாதம் 1ம் தேதி என்றாலே நம் நினைவுக்கு வருவது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வோர். அதன்படி 2024ல் சபரிமலை செல்ல நினைப்பவர்கள் கார்த்திகை 1 ம் தேதி மாலை அணிய நல்ல நேரம் எத்தனை மணிக்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் . கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மாலையிட்டு 41 நாட்கள் விரதம் இருப்பார்கள் அப்படி இந்த 2024ம் ஆண்டில் கார்த்திகை 1ம் தேதி சனிக்கிழமை வருகிறது. ஆங்கில தேதி படி நவம்பர் மாதம் 16ம்தேதி வருகிறது. கார்த்திகை 1ம் தேதி சனிக்கிழமை நல்ல நேரம் : காலை நல்ல நேரம் 7:45 முதல் 8:45 வரை & மாலை: 4:45 முதல் 5:45 கௌரி நல்ல நேரம் காலை: 12:15 முதல் 1:15  வரை & இரவு: 9:30 முதல் 10:30 வரை. இராகு காலம்: 9:00 முதல் 10:30 வரை. எமகண்டம்: 1:30 முதல் 3:00 வரை.  கார்த்திகை மாதம் 1ம் தேதியன்று மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் சிலர் மகரஜோதி வரை மாலை அணிந்து விரதம் மேற்கொள்வார்கள். இந்த கார்த்திகை மாதம் முழுவதும் திரும்பும் பக்கம் எல்லாம் ஜவ்வாதும், சந்தனமும் மணக்கும். சிவன், முருகன், ஐயப்பன் என்று முக்கியமான தெய்வங்களை வணங்கும் கார்த்திகை மாதம் புனிதமான மாதமாக கருதப்படுகிற...

Vanitha Vijayakumar Husband List: வனிதா விஜயகுமாரின் கணவர்கள்...!

Image
தமிழ் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவி தமிழ் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் வனிதா. இவர் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது டிவி ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்று வருகிறார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்து செய்துள்ளார். தற்போது நடன இயக்குனர் ராபர்ட் என்பவரை வரும் 5ம் தேதி அக்டோபர் 2024 திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.    வாழ்க்கைத் துணைவர்கள் 1) ஆகாஷ் - ( 2000 - 2007 )   2) ஆனந்த் ஜெயராஜன் - ( 2007 - 2012 )   3) பீட்டர் பால் - ( 2020 - 2020 ) 4) ராபர்ட்   - ( 5 அக்டோபர் 2024 - முடிவு நிலுவையில் உள்ளது )

Aadi 1 2024 Date Tamil Calendar: ஆடி மாதம் 1ம் தேதி!!!

Image
ஆடி மாதம்  என்பது அம்மனுக்கு உகந்த மாதம். இந்த ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் சிறப்பு மிகுந்த நாட்கள் ஆகும். அப்படி பட்ட இந்த ஆடி 1ம் தேதி 2024ல் ஜூலை மாத ம் 17ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. ஆடி மாதம் 1ம் தேதியை தொடர்ந்து ஆடி மாதத்தில் ஆடி பெளர்ணமி, ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடி கிருத்திகை என பல்வேறு முக்கிய பண்டிகை நாட்கள் வரவுள்ளது. அதிலும் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் என்றால், இன்னமும் மங்களகரமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது. இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொஹரம் பண்டிகையும் அதே தேதியில் வருகிறது.

Deepavali Train Ticket Booking: 2024 தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தேதி!!!

Image
இந்த வருடம் 2024 ல் தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கு ம் தேதி விரைவில் வரவுள்ளது. முன்கூட்டியே உங்கள்  பெயர் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பெயர்களை ரயில்வே இணையதளத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட விரும்புவர். அதன்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 31ம் தேதி, வியாழக்கிழமையன்று கொண்டாடப்படவுள்ளது. இந்தியன் ரயில்வே டிக்கெட் முன்பதிவானது 120 நாட்களுக்கு முன்பு தொடங்கும். இந்த முன்பதிவானது ரயில்வே டிக்கெட் மையங்களிலும் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான irctc.co.in முன்பதிவு செய்யலாம் .     பொதுவாக தீபாவளிக்கு ஒரிரு நாட்கள் முன்னதாக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்குவர் அதன்படி அக்டோபர் 31ம் தேதி தீபாவளி  பண்டிகை அதற்கு இரு நாள் முன்னதாக அக்டோபர் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ரயில் டிக்கெட் புக் செய்ய நீங்கள்  விரும்பினால். ஜூலை 1 ஆம் தேதியன்று முன்பதிவு செய்ய வேண்டும். Diwali Train Ticket Booking Starts On: Monday (Ju...

Vaikasi Visakam 2024: Date & Time - வைகாசி விசாகம் 2024

Image
வைகாசி விசாகம் 2024ல் மே 22ம் தேதி, புதன்கிழமை (வைகாசி 9) வருகிறது. வைகாசி விசாகம் முருகப்பெருமானின் பிறந்த நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது,  இந்த வைகாசி விசாகம் தமிழ் மாதம் வைகாசியில் விசாகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி விசாகம் மே 22ம் தேதி காலை 08.18 மணி துவங்கி, மே 23ம் தேதி காலை 09.43 வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. இதனால் வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் மே 22ம் தேதி நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் உள்ளதால் அன்றைய தினம் விரதம், வழிபாடு, பூஜைகளை மேற்கொள்ளலாம்.  வைகாசி விசாகம் நாளில், விசாகம் நட்சத்திரம் பௌர்ணமி அல்லது பௌர்ணமியுடன் இணைந்திருக்கும் போது, ​​பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று, முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக சுப்பிரமணியர் கோவில்களுக்கு பால் எடுத்துச் செல்கிறார்கள். சில கிராமங்களில் இந்த வைகாசி விசாகம் நாளில் தங்கள் குலதெய்வங்களை வணங்குகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இந்த வைகாசி விசாகம் நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

2024 Lok Sabha Election Date in Tamilnadu: மக்களவை தேர்தல் தேதி!!!

Image
தற்போதைய நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், 18வது மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவுள்ளது. இதில் இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு  நடைபெறவுள்ளது . இந்த லோக்சபா தேர்தலில் இந்தியா முழுவதும் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இதில் தமிழ் நாட்டில் வாக்களிக்க தகுதியானவர்கள் 6.18 கோடி வாக்காளர்கள். இதனிடையே தமிழ் நாட்டில் 18வது மக்களவை தேர்தல் (Lok Sabha Election date in tamilnadu) வருகின்ற ஏப்ரல் மாதம் 19ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது . அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணிக்காக பயிற்சி வகுப்புகள் தொடங்கிள்ளது. அவர்களிடம் பேசிய போது தமிழக தேர்தல் தேதி குறித்த தேதி விவரங்கள் தெரியவந்தது.

கிளாம்பாக்கம் vs கேளம்பாக்கம் சென்னைக்கு வருவோரின் புதிய குழப்பம்.!!!

Image
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் பற்றி பலரும் செய்திகள் வாயிலாக அறிந்து இருப்பீர்கள். சென்னை கோயம்பேட்டில் இருந்த பழைய பேருந்து நிலையம் நெருக்கடி காரணமாக வேறு இடத்திற்கு மாற்றலாம் என்று முடிவெடுத்து. இந்த புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.  இது கடந்த பொங்கல் பண்டிகை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இதனிடையே இன்னும் பலருக்கும், குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பயணிகள் பலருக்கும் இந்த பெயர் குழப்பமாக உள்ளது என்று கூறுகின்றனர். கிளாம்பாக்கம் என்பது (GST Road) ஜிஎஸ்டி சாலையில் வண்டலூர் அருகில் உள்ளது.  கேளம்பாக்கம் என்பது  (OMR Salai) ஓம்ஆர் சாலையில் நாவலுர், சிறுசேரி, திருப்போரூர் அருகில் உள்ளது.   எனவே தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம்.

Jingrudha Dhanga Song Lyrics in Tamil: ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா பாடல்

Image
பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் (Amazon Prime) மார்டன் லவ் சென்னை என்ற பெயரில் வெளியான சீரிஸ்ல் டீரைலர் பாடல் (Jingrudha Dhanga Song) ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா அவ பந்தயப் புறா என்ற பாடல் மிகவும் அதிகமாக இணையவாசிகளின் ரசிக்கப்பட்டது. அந்த பாடல் வரிகள் மற்றும் யூடுயூபில் வெளியான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.   ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா அவ பந்தயப் புறா ஹே ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா நான் single′uh சுறா சோறா, பொக்கன்னா சோறா கைமா பன்னி நைசா வச்சு தின்னாளே ம்ம்ம்… ம்-ம்-ம் கேரா, மங்கூசா மாரா பைஜாமா போட்டு பந்தலப் போட்டு நின்னேனே ம்ம்ம்… ம்-ம்-ம் அவ பந்தயப் புறா நான் single’uh சுறா அவ பந்தயப் புறா நான் single′uh சுறா ஹே ஜிங்கர்ததங்கா, அவ பந்தயப் புறா ஹே ஜிங்கர்ததங்கா, நான் single’uh சுறா ஹே ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா அவ பந்தயப் புறா ஹே ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா நான் single’uh சுறா பிஸ்மி பரோட்டா சால்னா பிச்சுப்போட்டு ஊட்டுவேன் ஏன் ஆளுனா குஸ்மி எவனா உள்ள பூந்தான்னா டிச்சுமி அடிச்சா அவன் செத்தாண்டா டும்மாங்கோலி அட...

சொல்லுங்க மாமா குட்டி லவ் டுடே பாடல் வரிகள்!

Image
ஏய் கன்னுகுட்டி! "சொல்லுங்க மாமா குட்டி இன்னொரு லாங் டிரைவ் போலாமா! சொல்லுங்க  மாமா குட்டி சொல்லுங்க மாமா குட்டி சொல்லுங்க மாமா குட்டி சொல்லுங்க மாமா குட்டி" லாங் டிரைவ், லாங் டிரைவ், லாங் டிரைவ், லாங் டிரைவ் போலாமா "சொல்லு மாமாகுட்டி சொல்லு மாமாகுட்டி சொல்லு மாமாக்குட்டி"

Hip Hop Zajal Song Reels விபத்து ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது!

Image
Hip Hop Zajal Song என்ற இந்த பாடல் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடுப்பில் மிகவும் பிரபலமாக உள்ளது அனைவர் மத்தியிலும். இந்த பாடலால் விபத்து ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. இந்த Hip Hop Zajal பாடலை பலரும் இசைத்த படி கார் மற்றும் பைக்குகளில் செல்கின்றனர். அதிலும் குழந்தைகளை கார் மேல் பக்கத்தில் மற்றும் முன் பக்கத்தில் அமர வைத்தவாறு (car roof and front bumper cause may accident) மீது அமர வைத்து ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் போடுகின்றனர். இது சில நேரங்களில் விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் இதை தவிர்ப்பது நல்லது.

இளந்தாரி பய Means.. இளந்தாரி புள்ள போல் வாழ்வது எப்படி?

Image
இளந்தாரி புள்ள இந்த வார்த்தை இப்போது தமிழில் டிரென்டிங்கில் உள்ள சொல் . உண்மை யில் இளந்தாரி என்றால் இளைஞன், வாலிபன், young man என்று பொருள். தமிழில் வெளிவந்த பிரான்மலை என்ற திரைப்படத்தில் வேல.ராமமூர்த்தி பேசும் "எலும்ப எடுத்துக் கடிடா இளந்தாரி புள்ள.. விடிஞ்சு எந்திரிச்சு நல்லா எண்ணெய் தேய்ச்சு குளிச்சிட்டு வெடக்கோழி அடிச்சி, மெதக்க மெதக்க நல்லெண்ணய ஊத்தி சுடச்சுட ஒரு சட்டி குழம்ப குடிச்சிட்டு, தூக்கம்போட்டு எந்திரிச்சம்னா, எவனடா தூக்கிப்போட்டு மிதிக்கலாம்னு இருக்கும்.. அதாண்டா இளந்தாரி புள்ளைக்கு அர்த்தம்" என்ற வாசகம் இணையத்தில் மிகவும் பிரபலமாக பேசப்படுகிறது. இது போக பல்வேறு மீம்ஸ் டெம்ப்ளேட்களில் இளந்தாரி புள்ள வைத்து ஆன்லைனில் டிரென்டிங்கில் உள்ளது. ஆனால் உண்மையில் இளந்தாரி புள்ளயாக வாழ முடிமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்தில் வேல.ராமமூர்த்தி கூறுவது போல போல உள்ளவர்களை இளந்தாரி புள்ளயாக பார்பவர்களை விட இந்த உலகம் நாதாரி பிள்ளையாக தான் பார்க்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மகா சிவராத்திரி 2023: தேதி, பூஜை நேரம், விரத நடைமுறை என்ன?

Image
ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருகிறது, மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் மகா சிவராத்திரி2023, (மாசி 6) பிப்ரவரி 18ஆம் தேதி சனிக்கிழமை இரவு  08:03 மணிக்குத் தொடங்கி, பிப்ரவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 04:19 மணிக்கு நிறைவடைகிறது. பார்வதி தேவி தனது வாழ்க்கையில் சிவனைக் கணவனாகப் பெறுவதற்கு கடுமையான தவம் செய்தாள்.  அவரது கடின முயற்சியின் விளைவாக, சிவபெருமானும் பார்வதியும்  திருமணம் செய்து கொண்டனர். இதுவே மகாசிவராத்திரியாக கருதப்படுகிறது. இதுதவிர இன்னும் பல கதைகள் புராணங்களில் மகா சிவராத்திரி தினத்தைப் பற்றி வேறு விதமாக கூறுகிறது.   மகா சிவராத்திரி வழிபடும் முறை:   சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து இந்த பூஜைகளை செய்கின்றனர். சிவபெருமானுக்கும் , பார்வதி தேவிக்கும் பலவிதமான அபிஷேகம் ஆரத்தி செய்யபடுகிறன. இந்த சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனையும் சக்தியையும் வழிப்பட்டால் கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும்,...

Pongal Valthukkal 2025: இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 2025

Image
உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் 2025 ஆம் ஆண்டின் இனிய ‌பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கல் பண்டிகையை அனைவரும் புத்தாடை அணிந்து புது நெல்லில் பொங்கல் வைத்து ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சூரியனுக்கு படைத்து உழவுக்கு உறுதுணையாக உள்ள மாடுகளுக்கு நன்றி சொல்லி கொண்டாடுவோம். பொங்கல் வாழ்த்து ஸ்டிக்கர்கள் மற்றும் 2025 பொங்கல் வாழ்த்துக்கள் ஸ்டேட்ஸ் படங்கள் இங்கே பதிவேற்றம் செய்துள்ளோம். பொங்கல் பண்டிகையன்று உங்கள் உறவினர்களும், நண்பர்களும் இந்த பொங்கல் வாழ்த்துக்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை WhatsApp மற்றும் Facebook வழியாக பகிர்ந்து உங்கள் சந்தோஷமான தருணத்தை வெளிப்படுத்துங்கள். Tamilay.com Wishing You A Very Happy Pongal 2025.