Thai Amavasai 2023: தை அமாவாசை தேதி, நேரம் எப்போது?

ஒவ்வொரு ஆண்டும் 12 அமாவாசை நாட்கள் வருகிறது. இதில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மிகவும் பிரசித்தியானது.

இந்த பதிவில் தை அமாவாசை 2023ல் எப்போது வருகிறது எந்த நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சரியான நல்ல நேரம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

ஒருவர் தன் வாழ்வின் ஊன்றுகோலாக இருந்த தன் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களை வணங்காமல் மற்ற தெய்வங்களை வணங்கி ஒரு பயனும் இல்லை.

அவ்வாறு இருக்கையில் இந்த சிறப்பு வாய்ந்த தை அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவது நல்லது.

தை அமாவாசை எப்போது?

இந்த வருடம் தை அமாவாசை (21-1-2023) தை 7ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4.24 A.M தொடங்கி மறுநாள் (22-1-2023) தை 8ம் தேதி ஞாயிறு அதிகாலை 3.20A.M முடிவடைகிறது.


இந்த தை அமாவாசையன்று எழை எளியவர்களுக்கு மற்றும் வயதானவர்களுக்கு உணவு அளிப்பது சிறப்பு. அதுபோல காகம், பசு, நாய், பூனை, எறும்பு உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவளித்தால் நன்மை கிடைக்கும்.

Comments

Post a Comment