அனுமன் ஜெயந்தி 2024: ஹனுமான் பிறந்த நாள் - Hanuman jayanti 2024

மார்கழி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரம் மற்றும் அமாவாசை திதியில் இந்த அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளே அனுமன் அவதரித்த நாளாக கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தி

அதன்படி இந்த வருடம் 2024ல் இரண்டு முறை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஒன்று இந்த வருடத்தின் முதல் மாதமான ஜனவரி 11ம் தேதி வியாழக்கிழமை. மற்றொன்று 2024 டிசம்பர் 30, மார்கழி 15ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

அனுமனை ஆஞ்சநேயர், மாருதி, அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன், ராம பக்தன், வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் என பல பெயர்களில் நாம் அழைக்கிறோம். பகவான் ராமருக்கு மிகவும் பிடித்த பக்தன் என்றால் அது அனுமன் மட்டுமே. அவரை போல் உண்மையான பக்தனை இந்த உலகில் எங்கும் பார்க்க முடியாது என்று புகழ்ந்துள்ளார்.   

அதனால் இந்த அனுமன் ஜெயந்தி அன்று அனுமானை உண்மையான பக்தியோடு, அவருக்கு பிடித்த உளுந்து மற்றும் மிளகு மட்டும் சேர்த்து செய்யப்படும் வடைமாலை அல்லது வெற்றிலையில் சிறிது துளசி மற்றும் வெண்ணெய் வைத்து அவரை வழிப்பட்டால் சகல சௌபாக்கியங்களையும் நமக்கு அள்ளிதருவார்.

Comments