மகா சிவராத்திரி 2023: தேதி, பூஜை நேரம், விரத நடைமுறை என்ன?

ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருகிறது, மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் மகா சிவராத்திரி2023, (மாசி 6) பிப்ரவரி 18ஆம் தேதி சனிக்கிழமை இரவு  08:03 மணிக்குத் தொடங்கி, பிப்ரவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 04:19 மணிக்கு நிறைவடைகிறது.

மகா சிவராத்திரி 2023
பார்வதி தேவி தனது வாழ்க்கையில் சிவனைக் கணவனாகப் பெறுவதற்கு கடுமையான தவம் செய்தாள்.  அவரது கடின முயற்சியின் விளைவாக, சிவபெருமானும் பார்வதியும்  திருமணம் செய்து கொண்டனர். இதுவே மகாசிவராத்திரியாக கருதப்படுகிறது. இதுதவிர இன்னும் பல கதைகள் புராணங்களில் மகா சிவராத்திரி தினத்தைப் பற்றி வேறு விதமாக கூறுகிறது.
 
மகா சிவராத்திரி வழிபடும் முறை:
 
சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து இந்த பூஜைகளை செய்கின்றனர். சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் பலவிதமான அபிஷேகம் ஆரத்தி செய்யபடுகிறன. இந்த சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனையும் சக்தியையும் வழிப்பட்டால் கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், திருமண வைப்போம் நடைபெறும் என்பது ஐதீகம். இதுதவிர பிறவி புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Comments