இளந்தாரி பய Means.. இளந்தாரி புள்ள போல் வாழ்வது எப்படி?

இளந்தாரி புள்ள இந்த வார்த்தை இப்போது தமிழில் டிரென்டிங்கில் உள்ள சொல். உண்மையில் இளந்தாரி என்றால் இளைஞன், வாலிபன், young man என்று பொருள். தமிழில் வெளிவந்த பிரான்மலை என்ற திரைப்படத்தில் வேல.ராமமூர்த்தி பேசும் "எலும்ப எடுத்துக் கடிடா இளந்தாரி புள்ள.. விடிஞ்சு எந்திரிச்சு நல்லா எண்ணெய் தேய்ச்சு குளிச்சிட்டு வெடக்கோழி அடிச்சி, மெதக்க மெதக்க நல்லெண்ணய ஊத்தி சுடச்சுட ஒரு சட்டி குழம்ப குடிச்சிட்டு, தூக்கம்போட்டு எந்திரிச்சம்னா, எவனடா தூக்கிப்போட்டு மிதிக்கலாம்னு இருக்கும்.. அதாண்டா இளந்தாரி புள்ளைக்கு அர்த்தம்" என்ற வாசகம் இணையத்தில் மிகவும் பிரபலமாக பேசப்படுகிறது.

வேல.ராமமூர்த்தி
இது போக பல்வேறு மீம்ஸ் டெம்ப்ளேட்களில் இளந்தாரி புள்ள வைத்து ஆன்லைனில் டிரென்டிங்கில் உள்ளது. ஆனால் உண்மையில் இளந்தாரி புள்ளயாக வாழ முடிமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்தில் வேல.ராமமூர்த்தி கூறுவது போல போல உள்ளவர்களை இளந்தாரி புள்ளயாக பார்பவர்களை விட இந்த உலகம் நாதாரி பிள்ளையாக தான் பார்க்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Comments