கிளாம்பாக்கம் vs கேளம்பாக்கம் சென்னைக்கு வருவோரின் புதிய குழப்பம்.!!!
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் பற்றி பலரும் செய்திகள் வாயிலாக அறிந்து இருப்பீர்கள். சென்னை கோயம்பேட்டில் இருந்த பழைய பேருந்து நிலையம் நெருக்கடி காரணமாக வேறு இடத்திற்கு மாற்றலாம் என்று முடிவெடுத்து. இந்த புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இது கடந்த பொங்கல் பண்டிகை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இதனிடையே இன்னும் பலருக்கும், குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பயணிகள் பலருக்கும் இந்த பெயர் குழப்பமாக உள்ளது என்று கூறுகின்றனர்.
கிளாம்பாக்கம் என்பது (GST Road) ஜிஎஸ்டி சாலையில் வண்டலூர் அருகில் உள்ளது.
கேளம்பாக்கம் என்பது (OMR Salai) ஓம்ஆர் சாலையில் நாவலுர், சிறுசேரி, திருப்போரூர் அருகில் உள்ளது.
எனவே தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம்.
Comments
Post a Comment