Vaikasi Visakam 2024: Date & Time - வைகாசி விசாகம் 2024

வைகாசி விசாகம் 2024ல் மே 22ம் தேதி, புதன்கிழமை (வைகாசி 9) வருகிறது. வைகாசி விசாகம் முருகப்பெருமானின் பிறந்த நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, இந்த வைகாசி விசாகம் தமிழ் மாதம் வைகாசியில் விசாகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி விசாகம் மே 22ம் தேதி காலை 08.18 மணி துவங்கி, மே 23ம் தேதி காலை 09.43 வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. இதனால் வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் மே 22ம் தேதி நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் உள்ளதால் அன்றைய தினம் விரதம், வழிபாடு, பூஜைகளை மேற்கொள்ளலாம். 

Vaikasi Visakam 2024
வைகாசி விசாகம் நாளில், விசாகம் நட்சத்திரம் பௌர்ணமி அல்லது பௌர்ணமியுடன் இணைந்திருக்கும் போது, ​​பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று, முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக சுப்பிரமணியர் கோவில்களுக்கு பால் எடுத்துச் செல்கிறார்கள். சில கிராமங்களில் இந்த வைகாசி விசாகம் நாளில் தங்கள் குலதெய்வங்களை வணங்குகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இந்த வைகாசி விசாகம் நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

Comments