Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம்!
திருக்கார்த்திகை தீபம் தேதி 2024: Karthigai Deepam Date & Time
தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபம் வரும் கார்த்திகை மாதம் 28ம் தேதி, டிசம்பர் 13ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக, அன்றைய தினம் பரணி நட்சத்திரம் காலை 6:50 முதல் மறுநாள் டிசம்பர் 14 அதிகாலை 4:56 வரை உள்ளது. எனவே டிசம்பர் 13ம் தேதி மாலை 6:35க்கு மேல் 7:30குள் கார்த்திகை தீபத்தை உங்கள் வீடுகளில் எற்ற நல்ல நேரம் ஆகும்.
கார்த்திகை தீப திருநாளன்று மிகவும் புகழ் பெற்ற திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்படுகின்றது. அன்று காலை மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் தோன்றும் சிவபெருமான் காட்சியளித்ததை நினைவு கூறும் வகையில் திருவண்ணாமலை மலை உச்சியின் மேல் அன்றைய தினம் மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபம் வருவதற்கு முன்னதாகவே 2668 அடி உயரம் கொண்ட மலை மீது கொப்பரை தீபம் வைக்கப்படும்.
Comments
Post a Comment