Muthalamaichar Kalaignar Kapitu Thittam: முதலமைச்சரின் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்!!!
தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் பயன் என்ன?
காப்பீட்டு அட்டை பெறும் வழிமுறைகள் என்ன?
சிகிச்சைகள் விவரங்கள்:
பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சைகள், அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருக்கும் இதய, நரம்பு, சிறுநீரக நோய்கள், அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவற்றை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லா மருத்துவமாக இந்த காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை பெறலாம்.
ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான மதிப்புள்ள சிகிச்சைகள் பெறலாம். (சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் CMCHISTN வலைத்தளத்தில் விவரமாக உள்ளது)
சிகிச்சை பெற தகுதி:
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும். அங்கு சான்றிதழ்களை சரிபார்த்து, குடும்ப தலைவரின் புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதைத் தொடர்ந்து 22 இலக்க எண் கொடுப்பார்கள். காப்பீட்டு அட்டை வருவதற்கு முன்னதாக, மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், 22 இலக்க எண்ணைக் கொண்டு, சிகிச்சை பெறலாம். குடும்ப தலைவர் காப்பீட்டு அடை பெற்றால், அவருடைய சட்டப்பூர்வமான மனைவி/கணவர், குழந்தைகள், பெற்றோர்கள் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். ஆனால், அவர்கள் பெயர்கள், குடும்ப அட்டையில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டுத் தொடர்புக்கு:
இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை https://www.cmchistn.com/features_ta.php என்கிற இணைய தளத்தில் அறியலாம். இதில், ஆதார் எண் இணைப்பு, விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, காப்பீட்டு அட்டை செயல்பாட்டு நிலை, சிகிச்சை பெறும் நோய்களின் விபரம் உள்ளிட்டவற்றையும் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment